விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைகளுக்கு தீர்வுவேண்டி வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பெரும்பாலான கமநல சேவை நிலையங்களுக்கு முன்னால் இன்று காலை 9 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் மூளாயில் உள்ள கமநல சேவை நிலையத்திற்கு முன்னாலும் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் உரத்தை தடுத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, விவசாயிகளே நாட்டின் முள்ளந்தண்டு என்று கூறிவிட்டு விவசாயிகளின் முள்ளந்தண்டினை முறிக்காதே என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலி.மேற்கு பிரதேச சபையின் உறுப்பினரான கந்தையா இலங்கேஷ்வரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில், வலி. மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.