கேரள கன மழையில் சிக்கி 27 பேர் பலி ; கோட்டயம், இடுக்கி மாவட்டங்கள் மோசமாக பாதிப்பு

By Vishnu

18 Oct, 2021 | 09:57 AM
image

கேரளாவில் பெய்துவரும் கன மழையினால் உண்டான அனர்த்தங்களில் சிக்கி குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளன. 

கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து அதிகமான உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

Image

மீண்டும் பலத்த மழை வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right