விண்வெளியில் படப்பிடிப்பை நிறைவுசெய்து பூமிக்கு திரும்பிய படப்பிடிப்புக் குழு

Published By: Digital Desk 3

18 Oct, 2021 | 10:17 AM
image

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 12 நாட்களாக படப்பிடிப்பு வேலைகளை நிறைவு செய்த படப்பிடிப்புக் குழுவினர் கஜகஸ்தானில் தரையிறங்கினார்கள்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 12 நாட்கள் இருந்த ரஷ்ய நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆகியோர் விண்வெளியில் முதல் படப்பிடிப்பை நிறைவுசெய்துவிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை பூமிக்குத் திரும்பியதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரொஸ்கோஸ்மோஸ் (Roscosmos ) தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் த செலன்ஞ் (The Challenge) என்ற படத்தின் படப்பிடிப்பு குழுவே விண்வெளிக்கு படப்பிடிப்பை மேற்கொள்வதற்காக சென்றது.

தயாரிப்பாளர் கிளிம் ஷிபென்கோ (Klim Shipenko)

நடிகை யூலியா பெரெசில்ட் (Yulia Peresild), தயாரிப்பாளர் கிளிம் ஷிபென்கோ (Klim Shipenko) மற்றும் அன்டன் ஷ்காப்லெரோவ் (Anton Shkaplerov) ஆகியோர் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி கஸகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து சோயுஸ் எம்எஸ் -18 (Soyuz MS-18) விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார்கள்.

படப்பிடிப்புக்காக குழுவினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. குழுவினர் 'The Challenge' திரைப்படத்தில் வெவ்வேறு காட்சிகளை படமாக்க 12 நாட்கள் விண்வெளியில் செலவிட்டுள்ளார்கள்.

நடிகை யூலியா பெரெசில்ட் (Yulia Peresild)

இதன் மூலம் விண்வெளியில் படப்பிடிப்பை நடத்தும் உலகின் முதல் நாடாக ரஷ்யா வரலாறு படைத்திருக்கிறது.

விண்வெளி பயணம் குறித்து 37 வயதான நடிகை யூலியா பெரெசில்ட் தெரிவிக்கையில்,

“ ஐ.எஸ்.எஸ்.ஸை விட்டு வெளியேறுவதற்கு வருந்துகிறேன். நான் இன்று சோகமான மனநிலையில் இருக்கிறேன்.

ஏனென்றால், 12 நாட்கள் என்பது மிக நீண்ட காலம் என்று தோன்றியது, ஆனால் அது முடிந்ததும், நான் விடைபெற விரும்பவில்லை," என ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பெரெசில்ட் மற்றும் ஷிபென்கோ மாஸ்கோவின் புறநகரில் உள்ள ரஷ்யாவின் விண்வெளித் திட்டத்தின் இல்லமான ரஷ்ய ஸ்டார் சிட்டிக்கு அனுப்பப்பட்டனர், இது விமானத்திற்கு பிந்தைய மீட்புக்காக ஒரு வாரம் ஆகும் என்று ரோஸ்கோஸ்மோஸ் கூறினார்.

விண்வெளியில் எடுக்கப்பட்ட படம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்ப் 'தவறான தகவல் உலகத்தில் வாழ்கின்றார்"...

2025-02-19 17:14:46
news-image

எலான் மஸ்க் கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பை...

2025-02-19 15:07:39
news-image

பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தானில் வரிசையாக நிற்கவைத்து பேருந்து...

2025-02-19 13:22:56
news-image

'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன்...

2025-02-19 10:36:20
news-image

நிமோனியா தொற்குள்ளாகியுள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ் -...

2025-02-19 10:27:08
news-image

பொலிவியாவில் கோர விபத்து ; 30...

2025-02-18 16:23:00
news-image

பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...

2025-02-18 14:44:05
news-image

சர்ச்சைக்குரிய பிரபல யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு...

2025-02-18 14:59:48
news-image

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி :...

2025-02-19 11:22:57
news-image

“ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால்...

2025-02-18 12:25:23
news-image

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டதில்...

2025-02-18 13:23:52
news-image

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் -...

2025-02-18 08:57:01