அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பைசர் தடுப்பூசியின் மேலும் 608,000 டோஸ்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.

அதன்படி 1,817 கிலோ கிராம் எடையுள்ள இந்த தடுப்பூசி அளவுகள் கட்டார், தோஹா வழியாக இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. 

இதற்கிடையில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷா தசநாயக்க, இலங்கை ஐந்து மில்லியன் டோஸ் பைசர் தடுப்பூசியை வாங்கியுள்ளதாகவும், அவற்றில் ஏற்கனவே ஒரு மில்லியன் டோஸ்களை பெற்றுள்ளதாகவும் கூறினார்.

நவம்பர் இறுதிக்குள் இலங்கை மீதமுள்ள அளவுகளையும் பெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.