முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு எதிராக சாதிவெறியைப் பயன்படுத்தியதற்காக ஹரியானா பொலிஸாரினால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Former India all-rounder Yuvraj Singh.Yuvraj arrested in alleged casteist remarks case, released on bail: Haryana Police

நீதிமன்ற உத்தரவின் கீழ் யுவராஜ் சிங் முறையான பிணையில் நேற்று மாலை விடுவிக்கப்பட்டார்.

யுவராஜ் கைது செய்யப்பட்டு 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டார்.

2020 ஆம் ஆண்டு முதல் சாஹலுடனான இன்ஸ்டாகிராம் விவாதத்தின் போது தலித் சமுதாயத்திற்கு எதிரான 'அவமதிப்பு' மற்றும் 'அவமரியாதை' கருத்து குறித்து இந்த ஆண்டு பெப்ரவரியில் ஹன்சியைச் சேர்ந்த குடியிருப்பாளரால் யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.