(எம்.மனோசித்ரா)
பொருளாதார ரீதியில் நாடு நாளுக்கு நாள் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது.
எதிர்காலத்தில் பணம் அச்சிடும் அச்சகமொன்றை அரசாங்கம் நிறுவினாலும் அது குறித்து புதுமைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
அந்த அளவுக்கு அரசாங்கம் கையாளாகாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டார்.
திஸ்ஸமஹாராம ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அரசாங்கம் நாட்டுக்கு எற்படுத்தியுள்ள நிலையை அவதானிக்கின்ற போது 'நன்றாக இருந்த நாடும் வீழ்ச்சியடைந்துள்ள இடமும்' என்று கூறத் தோன்றுகிறது.
இந்த அரசாங்கம் முழு நாட்டையும் பாதாளத்தில் தள்ளியுள்ளது. பாண் ஒன்றை வாங்குவதற்கு கூட தள்ளுவண்டியொன்று நிறைய பணம் கொண்டு செல்ல வேண்டிய நிலையொன்று வெகுவிரைவில் உருவாகும்.
நாளுக்கு நாள் பொருளாதார ரீதியில் நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் பணம் அச்சிடும் அச்சகமொன்றை அரசாங்கம் நிறுவினாலும் அது குறித்து புதுமைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அந்த அளவுக்கு அரசாங்கம் கையாளாகாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
விவசாயிகள் அவர்களின் விளைநிலங்களை கைவிட்டு செல்கின்ற நிலைக்கும் அவ்வாறு கைவிடப்பட்ட அந்த விளைநிலங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசாங்கமே வழங்குகின்றது. அத்தோடு உள்நாட்டு உற்பத்திளார்களுக்கு மீண்டும் தலைதூக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளது. வேறு எவரும் அவ்வாறான எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி என்பது செயற்பாட்டு ரீதியாகவும் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல் இயக்கமும் ஆகும்.
கடனையும், கடன் தவணையையும் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளதோடு அதற்கு தேவையான வெளிநாட்டு இருப்புக்கள் நாட்டினுள் இல்லை. இவ்வாறான துரதிஷ்ட வசமான நிலைமை இதற்கு முன் அண்மைக்காலத்தில் ஒரு போதும் ஏற்படவில்லை.
பாதுகாத்து போசிப்பதற்கு என்னைச் சுற்றி குடும்ப உறுப்பினர்கள் இல்லை. எனது குடும்ப உறுப்பினர்கள் இந்த நாட்டின் மக்களாவர். எனது குழந்தைச் செல்வம் நாட்டில் உள்ள மொத்த குழந்தைகள். அவர்களுக்கு கீரிடம் அணிவிப்பது எனது கனவாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM