உள்ளுராட்சிமன்ற தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேர்தல் செயலகத்துக்கு முன் மஹிந்த ஆதரவு அணியின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

தேர்தல்கள் ஆணையாளரை சந்திக்க சென்ற போது அவர் இல்லாத காரணத்தினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேர்தலை உடனடியாக நடத்த கோரி தேர்தல் செயலகத்தின் அதிகாரிகளிடம் மனுவொன்றையும் கையளித்துள்ளனர்.

இதேவேளை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளை தேர்தல்கள் ஆணையாளர் நாளை சந்திக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.