1952 களில் தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியமைத்து,அது வரை படம் முழுவதும் 50,40.30 பாடல்களுடனும், இதிகாச, புராண படங்களாக தமிழ் சினிமாவை ஆளுமை செய்து கொண்டிருந்த காலங்களில் அதன் தன்மையை அதிரடியாக வேறுபடுத்தி சமூக சீர்திருத்தக் கொள்கைகளுடன், கலைஞர் கருணாநிதியின் எழுச்சி நிறை வசனத்துடன், தமிழ்த் திரைவானின் நட்சத்திரக் கூட்டங்களில், கலைச்சூரியனாக அவதாரம் பூண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான முதல் படமான பராசக்தி வெள்ளித்திரைக்கு சக்தி வழங்கி இன்றுடன் 69 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

1952.10.17 ஓர் தீபாவளித் திருநாளில் வெளிவந்த கலைத்தாயின் கலைமகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஒரே இரவில் அகிலமே வியக்கும் கதாநாயகனாக அறிமுகமாகி தனது ஒப்பற்ற அபார நடிப்பினால் உலக ரசிகர்களை தன் வசப்படுத்தி 69 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது? சொந்த நாட்டிலே வாழ முடியாமல் அயல்நாட்டிற்குச் சென்று வாழும் மக்கள் அழுது அழுது சேர்த்த கண்ணீரால் தான் கடல்நீர் உப்பாக இருக்கிறது.

பெரிய மனுசன் வீட்டு அந்தப்புரத்துல தொழிலாளி மொதலாளி பிரச்சினைக்கு இடமே கிடையாது…

பிச்சைக்காரனாய் திரிந்தாய் வெட்கமில்லை… திருடனாக மாறினாய் அப்போதும் வெட்கமில்லை ஆனால் உன் ஏமாற்றத்தை வெளியில் சொல்ல வெட்கப்பட்டிருக்கிறாய்…வேடிக் கையான மனிதன்

குறித்த படத்தில் இதே போன்ற பல்வேறு விதமான ஜனரஞ்சக வசனங்கள் இடம்பெற்றுள்ளன. 

எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ்