கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்த காட்டு யானைகள்

Published By: Gayathri

17 Oct, 2021 | 09:03 PM
image

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் காட்டுயானைக் கூட்டத்தினால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து இன்னல்களை எதிர்நோக்குவதாகவும் தாம் வாழ்வாதாரங்களை மேற்கொள்ள முடியாத நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக குறித்த பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் மத்தியில் அமைந்துள்ள தளவாய்க்காட்டில் பகலில் தங்கி நிற்கும் காட்டுயானைக் கூட்டம் இரவு வேளையானதும்  அப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் உட்பகுந்து அங்குள்ள பயன்தரும் வாழை, தென்னை, மா, பலா, கரும்பு, மரவெள்ளி, உள்ளிட்ட பயிரினங்களை அழித்து துவம்சம் செய்து வருவதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இவ்வாறு சனிக்கிழமை(16) இரவு தும்பங்கேணி, களுமுந்தன்வெளி, இளைஞர் விவசாயத்திட்டம், திக்கோடை, பாலையடிவட்டை, நெல்லிக்காடு, உள்ளிட்ட பல கிராமங்களுக்கள் புகுந்த மூன்றுக்கு மேற்பட்ட காட்டுயானைக்கூட்டம் அங்குள்ள பயிர்களை துவம்சம் செய்தது.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை(17) காலை 6 மணியளிவில் தான் அப்பகுதியைவிட்டு நகர்ந்தாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் இரவு முழுவதும் கண்விழித்திருந்து தமக்கு யானை வெடிகளும், இல்லாமல் பெரும் அவஸ்த்தைப்படுவதாகவும், அம்மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

தமக்கு யானைப் பாதுகாப்பு வெடிகள் முடிந்ததால் மக்களுக்கு யானைகளை விரட்டும் வெடிகள் வழங்குவதில் தாமதம் இருந்ததாகவும் தற்போதைக்கு யானைகளை விரட்டும் 1000 வெடிகள் வந்துள்ளது.

மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அதனை வழங்கவுள்ளதாகவும், இருந்தபோதிலும், இப்பிரதேசத்திலிருந்து முற்றாக காட்டுயானைகளை விரட்டுவதற்கு ஆட்பலம் போதாதுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வெல்லாவெளியில் அமைந்துள்ள சுற்றுவட்டக் காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மிக நீண்டகாலமாகவிருந்த எதிர்கொண்டுவரும் இப்பிரச்சனைக்கு அப்பிரதேசத்தில் இரவு பகலாக திரிகின்ற காட்டுயானைகளை முற்றாக அகற்றி தமது வாழ்வாதாரத்திற்கும், நிம்மதியான வாழ்வுக்கும் சம்மந்தப்பட்டவர்கள் வழிசமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுகிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச...

2025-12-06 17:26:11
news-image

யாழ். நிலத்தடி நீரின் பாதுகாப்புக்கு இன்றியமையாத...

2025-12-06 15:39:21
news-image

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள...

2025-12-06 16:43:18
news-image

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும்...

2025-12-06 15:42:56
news-image

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த...

2025-12-06 15:34:58
news-image

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் :...

2025-12-06 15:26:09
news-image

மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்தார் ஜனாதிபதி

2025-12-06 15:52:19
news-image

வெலிமடை- நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக மீண்டும்...

2025-12-06 15:22:43
news-image

7 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்க...

2025-12-06 15:19:56
news-image

டித்வா புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார்...

2025-12-06 13:56:32
news-image

தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை...

2025-12-06 14:03:54
news-image

நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறுகின்றது !

2025-12-06 13:08:58