செக் குடியரசுடன் வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம்
(எம்.மனோசித்ரா)
இலங்கைக்கும் செக் குடியரசிற்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறையின் உறவுகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் மிலன் ஹோவர்கா ஆகியோருக்கிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் மிலன் ஹோவர்கா தனது சேவை காலம் நிறைவடைந்ததையிட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை சந்தித்தபோதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
இதன்போது அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கும் செக் குடியரசிற்கும் இடையே நிலவும் நெருக்கமான மற்றும் சுமூகமான உறவுகளை சுட்டிக்காட்டினார்.
அமைச்சரின் உணர்வுகளை பிரதிபலித்த, செக் தூதர் ஹோவர்கா, தான் தூதுவராக பணியாற்றிய காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசு அளித்த வலுவான ஆதரவுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
இலங்கைக்கும் செக் குடியரசிற்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறையின் உறவுகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
பிராந்திய மற்றும் பல்தரப்பு பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டன.
சமகாலத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இரு தரப்பு இணக்கம் எட்டப்பட்டது.
கொவிட் -19 தொற்றுநோய்களின்போது இலங்கையில் செக் மக்களுக்கு வழங்கப்பட்ட உதவிகளுக்கு தூதுவர் நன்றி தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது இலங்கைக்கும் செக் குடியரசிற்கும் இடையில் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை இடமாற்றம் செய்தல் தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM