பாலுமகேந்திரா நூலகத்தின்  சிறுகதைப் போட்டியில் சுடு மணலில் சிலை விதைகள் சிறுகதைக்கு முதல் பரிசு

Published By: Digital Desk 2

17 Oct, 2021 | 05:49 PM
image

புளியந்தீவு நிருபர்

பாலுமகேந்திரா நூலகத்தின்  ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு  நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளருமான  ஓ.கே.குணநாதனின் சுடு மணலில் சிலை விதைகள் சிறுகதை முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது. இரண்டாமிடத்தினை வவுனியா நீ.நிலவிந்தனின் மிதிபடும் காவோலைகள் சிறுகதை பெற்றுக்கொண்டது. மூன்றாமிடத்தை கம்பஹா சுப்பிரமணியம் மஹின் எழுதிய 21 வருடங்கள் சிறுகதை பெற்றுக் கொண்டது.

ஆறுதல் பரிசு பெறும் சிறுகதைகளாக, யாழ்ப்பாணம் கீதாஞ்சலி சிங்கராஜா எழுதிய யாதுமாகி சிறுகதை, முல்லைத்தீவு நடராசா இராமநாதன் எழுதிய மீளுயிர்ப்பு, வவுனியா செ.சகாயராஜா எழுதிய கன்றுக்குட்டி, யாழ்ப்பாணம் மேரின் ரேச்சல் எழுதிய ஒப்புதல்கள், பிரித்தானியா விமலாதேவி பரமநாதன் எழுதிய முள்பாதை, ஜேர்மனியைச் சேர்ந்த இரத்தினம் பிரதீபன்  எழுதிய சாறம், யாழ்ப்பாணம் இராஜராஜேஸ்வரி தங்கராசா எழுதிய ஒரு மிதிவண்டியின் கதை, யாழ்ப்பாணம் சர்மிளா வினோதினி எழுதிய வெண்ணிலா, கொழும்பு சுரேந்திரன் தர்சித் ராகுல் எழுதிய சிரட்டை, வவுனியா ரேணுகா செயறூபன் எழுதிய நீ நடந்த பாதையிலே ஆகிய சிறுகதைகள் தெரிவு செய்யப்பட்டன.  

இப்போட்டியில் உலகெங்கிலுமிருந்து 195 படைப்பாளிகள் பங்கு கொண்டனர். அவற்றிலிருந்து எழுத்தாளர் கோகிலா மகேந்திரன், எழுத்தாளர் சயந்தன், திரைப்பட விமர்சகர் ரதன் ரகு ஆகியோர் அடங்கிய நடுவர் குழுவினால் தேர்வு நடைபெற்றது. 

முதலாம் பரிசு ரூபா 25ஆயிரம், இரண்டாம் பரிசு ரூபா 15000, மூன்றாம் பரிசு ரூபா 10000,  தலா 5000 பரிசு பெறும் 10 சிறுகதைகளின் பட்டியலை பாலு மகேந்திரா நூலகத்தினர் சூம் தொழில்நுட்பம் ஊடாக கடந்த வாரம் அறிவித்தனர். 

தமது முதலாம் ஆண்டு நிறைவினையொட்டி நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் பாலுமகேந்திரா நூலகத்தினர் நன்றிகளைத் தெரிவித்ததுடன், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர்கள் என்பதால் நாம் தமிழ் இலக்கியங்களோடு...

2024-07-15 11:23:10
news-image

யாழ். வட்டுக்கோட்டை சிவபூமி தேவார மடம் ...

2024-07-15 11:57:52
news-image

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய எண்ணெய் காப்பு...

2024-07-09 17:54:00
news-image

தொலஸ்பாகை தாமரவல்லி ஸ்ரீ முருகன் ஆலய...

2024-07-08 18:08:11
news-image

இலங்கையில் இலக்கிய பாரம்பரியம் இன்னும் மாறவில்லை!...

2024-06-29 14:05:39
news-image

"நான் எழுத்தாளராக பிறக்கவில்லை; ஒரு மனுஷியாகத்தான்...

2024-06-19 17:59:32
news-image

உலகில் எங்கும் கேட்கக்கூடாத குரல்! :...

2024-06-19 13:34:15
news-image

21ஆம் நூற்றாண்டில் பல்லவர் கலையின் வரலாறு...

2024-06-11 15:50:21
news-image

பல்­லவர் கால கலை­யம்சங்­க­ளுடன் கும்­பா­பி­ஷேகம் காணும்...

2024-06-09 20:13:09
news-image

நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் மஹா...

2024-06-01 15:46:52
news-image

மட்டக்களப்பில் வைகாசி மாத கதிர்காம யாத்திரையும்...

2024-05-30 10:23:39
news-image

வைகாசி விசாகத்தின் மகிமை 

2024-05-22 14:20:23