வடக்கில் சட்டத்தை நிலைநாட்ட அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துவேன் - வடமாகாண புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா

Published By: Digital Desk 2

17 Oct, 2021 | 05:48 PM
image

நேர்காணல்: ஆர்.ராம்

“13ஆவதுதிருத்தத்தின் ஏற்பாடுகளுக்கு மதிப்பளிப்பதோடு வடமாகாணத்தின் மறுமலர்ச்சிக்கான 53விடயங்களைகொண்ட விசேட நிகழ்ச்சித்திட்டமொன்று தயாரித்துள்ளேன்” 

வடக்கில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கு ஆளுநருக்கான அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தவுள்ளதோடு அவ்விதமான நிலைமைகள் தொடருமானால் அது எனது தனிப்பட்ட தோல்வியாகும் என்று வடமாகாணத்திற்கான புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, 

கேள்வி:- தேர்தல்கள்ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஆளுநர் பதவிக்கு திடீரென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- அவ்விதமானமுடிவு ஏன் எடுக்கப்பட்டது என்பதை நான் அறியவில்லை. ஆனாலும்ஒருவேளை மாற்றத்திற்கான தேவைப்பாடு இருந்திருக்கலாம் என்று கருதுகின்றேன். அந்தமாற்றத்தில் தற்போதைய தேவைகளுக்கு நான் பொருந்தியுள்ளேன் என்றே கருதுகின்றேன்.

கேள்வி:- ஆளுநராகபதவிப்பிரமாணம் செய்துள்ள நீங்கள் வடமாகாணம் சார்ந்து முன்னெடுக்கப்போகும் முதற் செயற்பாடு என்ன?

பதில்:- இந்தவிடயத்தில் புதியதொரு அணுகுமுறையைக் பின்பற்றவுள்ளேன். அதன்பிரகாரம்,முதலில் மாகாண மற்றும் அரசாங்க அதிபர்கள் ஒரு குழுவாக செயற்படுவதை உறுதிப்படுத்தப்படவுள்ளது. அதாவது,ஆளுநர், பிரதம செயலாளர்;, அமைச்சுகள்,அரச அதிபர்கள் ஆகியோர் ஒரு குழுவாக பணியாற்றுவதாகும். அத்துடன்,ஆளுநர் தமக்கு கொடுத்துள்ள முன்னுரிமைகளை குறித்த குழு புரிந்து கொள்ளுதல் முக்கியமானதாகின்றது.

அடுத்து, நடைமுறையில்உள்ள பணிகள் இடையூறுகள் இன்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்தல் முக்கியமாகின்றது. அரசாங்கம்மக்களின் வீட்டு வாயில்களுக்கே செல்கின்றது. பொதுமக்களின்பிரச்சனைகளை கையாளுவதில் பாரபட்சமின்றி செயற்படுவதோடு எந்த விதமான குற்றச்சாட்டுக்களுக்கும் பூச்சிய சகிப்புத்தன்மையுடன் அடுத்த கட்டப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனைவிடவும், ஆளுநருடன்சேர்ந்து பணியாற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலைமைத்துவம் வழங்குதலும் தேவையின் போது மத்திய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் செயன்முறையும் பின்பற்றப்படவுள்ளது.

கேள்வி:- வடக்கிற்குஇறுதியாக நியமிக்கப்பட்டிருந்த இரண்டு தமிழ் ஆளுநர்கள் குறித்தும் பொதுவெளியில் விமர்சனங்கள் உள்ள நிலையில் உங்களுக்கு சவால்கள் காத்திருக்கின்றன என்பதை உணர்ந்துள்ளீர்களா?

பதில்:- அவர்களுடன்என்னையும் இணைத்தால் நாங்கள் மூன்று நபர்கள். ஒவ்வொருவரும்வித்தியாசமானவர்கள். என்னுடையவெற்றி, அல்லது தோல்வியை எனது பலவீனங்களே தீர்மானிக்கட்டும்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

 https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-17#page-22

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க

https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22