யோசித ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்குமாறு கோரி நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

வெளிநாட்டில் வைத்திய பரிசோதனை செய்யவுள்ளதாக கூறி குறித்த மனுவை கொழும்பு மேல் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றில் எடுத்துக்கொள்வதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

யோசித ராஜபக்ஷ மீது நிதி மோசடி குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு நடைபெற்று வருவதால் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.