கூடவே அழைத்துவந்து  நட்டாற்றில் கைவிடப்பட்ட நிலையில் மக்கள் 

Published By: Digital Desk 2

17 Oct, 2021 | 03:19 PM
image

நீண்ட நேரமாய் பட்டினி போட்டு கட்டி வைத்திருந்த ஒரு கடிநாயை திடீரென அவிழ்த்து விட்டது போல் இருக்கிறது இலங்கை அரசாங்கம் முக்கியமான அத்தியாவசியப் பொருள்களான கோதுமை சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய நான்கின் மீதான விலைக்கட்டுப்பாடுகளை நீக்கி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல். 

ஏற்கெனவே அரிசி மீதான விலைக்கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட்டன. பெற்றோலியப் பொருள்களின் விலைகள் ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஒரு அதிகரிப்பிற்கான அழுத்தங்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. விலைக்கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னர் சாதாரண எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1498 ரூபாவிலிருந்து 2750 ரூபாவாக 84 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டது. 

பின்னர் 75 ரூபா குறைக்கப்பட்டு 2675 ரூபாவாக அறிவிக்கப்பட்டது. பால்மா ஒரு கிலோகிராமின் விலை 945 ரூபாவிலிருந்து 1195 ரூபாவாக 26.4 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல் போதுமை மாவின் விலைகளும 11.5 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டு விட்டன. அரிசி விலை மீதான கட்டுப்பாடுகளும் ஏலவே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அரிசிவிலைகள் 17 சதவீதத்திலிருந்து 37 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. 

விலைக்கட்டுப்பாடுகள் சந்தையில் பொருள்களுக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலைகளை சடுதியாக அதிகரிப்பதை தவிர்க்கும் பொருட்டு விதிக்கப்பட்டுள்ள விலைக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அரசு சார்பில் ஒரு சப்பைக்கட்டு விளக்கம் கூறப்பட்டது.

அரசாங்கம் சந்தையில் தலையிட்டு விலைக்கட்டுப்பாடுகளை விதித்தால் அந்த கட்டுப்பாட்டு விலைகளில் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்பது பொருளியலின் பால பாடங்களில் ஒன்று. அவ்வாறு ஏற்படும் தட்டுப்பாட்டை நீக்கி பொருள்களை சந்தைக்கு வழங்கும் ஆற்றல் அரசாங்கத்திற்கு இருந்தால் மட்டுமே சந்தையில் அரசாங்கம் தலையிட வேண்டும் அல்லாவிட்டால் கையாலாகாத்தனத்தை ஒத்துக்கொண்டு வாளாதிருக்க வேண்டும். 

இலங்கையில் 2019 வரை வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் சதவீதம் படிப்படியாகக் குறைவடைந்து சென்றிருந்த போதிலும் கோவிட் தொற்றுப்பரவலை அடுத்து வறுமை சுமார் 11 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இலங்கையில் வறுமைநிலை குறைந்திருந்தாக புள்ளிவிபரங்கள் காட்டினாலும் வறுமைக்குகோட்டுக்கு சற்றுமேலே தொங்கிக் கொண்டு அதற்குமேல் போக முடியாமல் ஊசலாடிக்கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். 

கோவிட் போன்ற ஒரு அனர்த்தத்தின் போது இவர்களே மீண்டும் வறுமையில் வீழ்வார்கள். எனவே விளிம்பு நிலையில் உள்ள மக்களை பொருள்கள் சேவைகளின் விலையதிகரிப்புகள் மிக மோசமாகப் பாதிக்கும். குறிப்பாக அரிசி கோதுமை சீனி எரிவாயு மற்றும் பெற்றோலியப் பொருள்களின் விலையதிகரிப்பு கடும் பாதிப்புகளை எற்படுத்தும்.  

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க 

 https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-17#page-43

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க

https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை தாமதப்படுத்த அரசு...

2024-12-13 17:34:29
news-image

இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக...

2024-12-13 13:51:26
news-image

மனித உரிமைகளும் பொறுப்புக்களும்

2024-12-11 17:06:28
news-image

சிரியாவின் அசாத்தின் நிலவறைக்குள்...! - சித்திரவதை...

2024-12-11 13:22:24
news-image

சர்வதேச சமூகத்திடமிருந்து ஆதரவை பெறுதல்

2024-12-11 11:18:31
news-image

இனவாதத்தை ஒழிப்பது குறித்த அரசாங்கத்தின் கருத்துக்களும்...

2024-12-11 11:05:09
news-image

இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாகிய விமான விபத்து -...

2024-12-10 12:27:56
news-image

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு குறுக்கே நிற்கும்...

2024-12-10 09:04:49
news-image

தமிழரசு கட்சி மட்டக்களப்பில் பெற்ற பெருவெற்றியும்...

2024-12-09 10:45:04
news-image

அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது...

2024-12-09 09:48:21
news-image

ஐந்தாண்டுகளுக்கு ஆளுகை தொடரும் - பிரதியமைச்சர்...

2024-12-08 15:45:45
news-image

ரஷ்ய-உக்ரேன் போர் முனைக்கு வலிந்து தள்ளப்பட்டுள்ள...

2024-12-08 15:48:28