திரைப்படங்களில் வெளிவருகின்ற போதைப்பொருள் விளம்பரங்களின் மூலம் சமூகம் எதிர்கொள்ளும் பாதிப்பு தொடர்பாக வெள்ளிக்கிழமை (15.10.2021) அன்று, இணையவழி ஊடகச்சந்திப்பொன்றினை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நடத்தியது. 

இதன்போது திரைப்படங்களின் மூலம் வெளிவருகின்ற மதுசாரம், சிகரட், ஏனைய போதைப்பொருள் விளம்பரங்கள், அவற்றின் தாக்கங்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இவ்வாறான விளம்பரங்களினால் எவ்வாறு பாதிப்படைகின்றனர் என பல கருத்துக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. 

இச்சந்திப்பிற்கு சிறப்பு அதிதிகளாக திரு. புபுது சுமனசேகர, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர், கலாநிதி. எஸ். ரகுராம், சிரேஷ்ட விரிவுரையாளர், ஊடகக்கற்கை நெறி பிரதானி, யாழ் பல்கலைக்கழகம் மற்றும் கலாநிதி. எஸ். ஜீவசுதன், சிரேஷ்ட விரிவுரையாளர், சமூகவியல் கற்கைநெறி பிரதானி, யாழ் பல்கலைக்கழகம், ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.