ஆர்.ராம்
மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மையப்படுத்தி இன்றையதினம் முல்லைத்தீவு முதல் பருத்தித்துறை வரையில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகிய தரப்புக்கள் பங்கேற்கப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.
முன்னதாக, இந்த போராட்டத்திற்கான அறிவிப்பினை கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் விடுத்திருந்த ஓரிரு நாட்களில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் இவ்விடயம் பற்றி கலந்தாலோசிக்கப்படவில்லை அதுபற்றி தாம் எதுவும் அறிந்திருக்கிவில்லை என்று கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் புளொட் தலைவர் சித்தார்த்தன் இவ்விடயம் பற்றி எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடாத போதும் அவருக்கும் இந்த விடயங்கள் பற்றி அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இதேவேளை, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இப்போராட்டம் பற்றிய கூட்டமொன்று நடைபெற்றிருந்தபோதும் அதில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்களே பங்கேற்றிருந்தனர்.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகட்சிகள் பங்கேற்றிருக்கவில்லை. அதேநேரம், இந்தச் செய்தி அச்சுக்குச் செல்லும் வரையில் பங்காளிகட்சிகளுடன் கண்டன போராட்ட ஏற்பாட்டளர்கள் யாரும் கலந்துரையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்தப் போராட்டத்தில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன். சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பங்கேற்பதும் கேள்விக்குறியாகியுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள ஏனைய அரசியல் தரப்புக்களும் இந்தப் போராட்டத்திற்கான ஆதரவினை இதுவரையில் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM