எதிர்வரும் வாரங்களில் பல பாரிய சிறுகோள்கள் பூமியை அண்மித்த வகையில் கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இவ்வாறு கடந்து செல்லும் பல சிறுகோள்களில் ஒன்றின் அளவானது நியூயோர்க்கின் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் அளவை ஒத்தது என்றும் நசா மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சிறுகோள்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து சென்றாலும், அவை பூமியை விட வெகு தொலைவில் உள்ளன. இதனால் எவரும் பயப்பட வேண்டியதில்லை என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
"வானியல் ரீதியாக, இவை பூமிக்கு அருகில் வருகின்றன. ஆனால் மனித அடிப்படையில், அவை மில்லியன் கணக்கான மைல்கள் தொலைவில் உள்ளன" என்று தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஆய்வகத்தின் பணிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
பூமிக்கு மிக நெருக்கான அணுகுமுறைகளில் சனிக்கிழமையன்று 238,854 மைல் தொலைவில் பூமியை கடந்து செல்லும் சிறுகோள் 2021-TJ15 என்பது ஆகும்.
அந்த சிறுகோள் 5.6 முதல் 13 மீட்டர் (18 முதல் 42 அடி) விட்டம் கொண்டது. அது ஒரு சிறிய சிறுகோள் இது நிலவின் தூரத்தை ஒத்த வகையில் பூமியை கடந்து செல்லும்.
2004 UE என்ற சிறுகோள் பூமியிலிருந்து சுமார் 2.6 மில்லியன் மைல் தொலைவில் நவம்பர் 13 ஆம் திகதி பூமியை கடந்து செல்லும்.
இது 1,246 அடி வரை நீலம் கொண்டது. ஏறக்குறைய எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரத்தை ஒத்தது.
இவை தவிர மேலும் பல பாரிய சிறுகோள்கள் எதிர்வரும் வாரங்களில் பூமியை கடந்து செல்லவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM