கேரளாவில் பெய்துவரும் கன மழையின் காரணமாக குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததுடன் பலர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரகாண்ட், மேற்கு உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாபின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் பெய்த கனமழையினால் தெற்கு மற்றும் மத்திய கேரளாவில் சனிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானோர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இடுக்கியில் உள்ள தொடுபுழா மற்றும் கொக்காயர் மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கூட்டிக்கல் ஆகிய இடங்களில் இருந்து இறப்புகள் பதிவாகியுள்ளன.

அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாநிலத்தில் பரவலான கனமழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.