(ஆர்.ராம்)

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்யக்கோரியும் இழுவைமடி சட்டத்தினை முறையாக அமுலாக்கக் கோரியும் கடல்வழி கண்டனப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப்போராட்டமானதுரூபவ் முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரையில் கடல்வழியில் நடைபெறவுள்ளது.

இந்தப்போராட்டத்திற்கான அழைப்பினை விடுத்திருந்த சுமந்திரன், வடக்கு மாகாண கடல்வளத்தினை பாதுகாப்பதோடு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் கவனத்தில் கொண்டு அனைவரும் கண்டனப் போராட்டத்தில் பங்கேற்பதற்கான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரியுள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவிலிருந்து கடல்வழியாக பருத்தித்துறைக்கு படகுகள் மூலம் போராட்டக்காரர்கள் செல்லவுள்ளதோடு இழுவைப் படகு தடைச்சட்டத்தினை அமுலாக்கக் கோரும் வலியுத்தல்கள் செய்யப்படவுள்ளது.

மேலும், இந்தப் போராட்டத்தில் சுமந்திரன், சாணக்கியன், ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள தோடு ஏனைய அரசியல் பிரதமுகர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்ரூபவ் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட கடற்றொழிலாளர்கள் ஆகியோர் பங்கெடுக்கவுள்ளனர்.

இதேவேளை, நாளைய தினம், வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து கமநல சேவைத் திணைக்களங்களின் முன்னாலும் விவசாயிகளுக்கான உரம் உட்பட அவர்களின் வாழ்வாதாரத்தினையும் எதிர்காலப்பாதுகாப்பினையும் உறுதி செய்வதை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்தில் ஒவ்வொரு கமநல சேவைத் திணைக்களத்தின் முன்றலிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள், பங்கேற்கவுள்ளனர்.

மேலும், இந்தப் போராட்டமானதுரூபவ் வடக்கு கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படுவதை தொடர்ந்து வடக்கு கிழக்கிற்கு வெளியிலும் விரிவு படுத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தப் போராட்டத்திற்கும் பல்வேறு தரப்பினரும் ஆதரவுகளை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.