பண மோசடி குற்றச்சாட்டுக்காக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அலெக்ஸ் சாப் என்ற குறித்த நபர் மதுரோவின் ஆட்சிக்கு ஒரு முன்னணி நபராக பணியாற்றினார் என்று அமெரிக்க கருவூலம் கூறுகிறது.

கொலம்பியாவில் பிறந்த தொழிலதிபரும் வெனிசுலா தூதருமான அலெக்ஸ் சாப், அமெரிக்க வங்கிகளில் தனது கணக்குகளைப் பயன்படுத்தி ஊழல் வருவாயைப் பணமோசடி செய்ததாக அமெரிக்கவினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.