(எம். எம். சில்வெஸ்டர்)

இருபதுக்கு 20 கிரிக்கெட் அரங்கில் அதிக சம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம்பெற்ற வீரராக மேற்கிந்திய தீவுகளின் டுவெய்ன் பிராவோ தனது பெயரை பதிவு செய்தார்.

14 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த டுவெய்ன் பிராவோ இருபத்துக்கு 20 கிரிக்கெட் அரங்கில் 16 ஆவது தடவையாக சம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம்பெற்றார்.

மேற்கிந்திய தீவுகளின்  சகலதுறை வீரரான டுவெய்ன் பிராவோ  உலகம் முழுவதிலும் விளையாடப்படுகின்றன இருபத்துக்கு 20 கிரிக்கெட் லீக்கில் விளையாடி வரும் வீரராக திகழ்கிறார்.

சி.பி.ல், ஐ.பி.ல், பிக் பாஷ் என கிரிக்கெட் விளையாடும் அநேகமான நாடுகளால் நடத்தப்படும் இருபத்துக்கு 20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி சக நாட்டு வீரரான கரன் பொல்லார்ட்டுடன் 15 தடவைகள் சம்பியன் பெற்ற அணியில் இடம்பிடித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று நடைப்பெற்ற ஐ. பி. எல். இறுதியில் பிராவோ விளையாடிருந்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்த அரிய சாதனையை படைத்தார்.

இந்த வரிசையில் டுவெய்ன் பிராவோ -16, பொல்லார்ட் -15, பாகிஸ்தானின் சொய்ப் மலிக் -13, இந்தியாவின் ரோஹித் ஷர்மா -10 தடவைகள் முன்னிலையில் உள்ளனர்.