இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி  ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே அவர்கள்  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களை  இன்று (16.10.2021) விமானப்படை தலையகத்தில் சந்திதித்தார்.

வருகை  தந்த இந்திய இராணுவ தளபதியை  கொழும்பு  விமானப்படைத்தள கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  வாசகே தலைமையில்  விமானப்படை வர்ணஅணிவகுப்பு படைப்பிரிவின்  இராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து விமானப்படை வரியா பணிப்பாளர்களை சந்தித்த இந்திய  இராணுவ தளபதி அனைவருடனும் இணைந்து குழு புகைப்படம்,ஒன்றயும் எடுத்துக்கொண்டார் இந்த விஜயத்தில் இந்திய இராணுவ உயர் அதிகாரிகளும் பங்கேற்று இருந்தனர்.

இறுதியாக  இலங்கை விமானப்படை தளபதி மற்றும் இந்திய இராணுவ தளபதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்று இருவருக்கும் இடையிலான பரஸ்பர கலந்துரையாடல் இடம்பெற்றது இதன்போது இந்திய இராணுவ தளபதி தனது தந்தை இந்திய விமானப்படை அதிகாரியாக கடமை புரிந்ததாக தெரிவித்தார்.

இறுதியாக  இருவருக்கும் இடையிலான நினைவுசின்னங்கள் பரிமாறப்பட்டது.