புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்தில் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரான சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதிமுக கட்சி தொடங்கப்பட்டு பொன்விழா கொண்டாடப்படும் தருணத்தில் அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான சசிகலா, ஜெயலலிதா மட்டும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதற்காக இன்று காலை சென்னை தி. நகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து அதிமுக கொடி கட்டப்பட்ட வாகனத்தில் புறப்பட்டார். சசிகலாவின் வருகையை முன்னிட்டு ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

சசிகலா ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வருகை தந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

''கடந்த ஐந்து ஆண்டுகளாக என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்திருக்கிறேன். 

ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஏன் தாமதமாக வந்தேன்? என்று அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதாவுடன் நான் இருந்த காலங்கள் என் வயதின் முக்கால் பகுதியாகும். எம்ஜிஆர், ஜெயலலிதா தமிழக மக்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் வாழ்ந்தனர்.  

இருவரும் அதிமுகவை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் புறப்படுகிறேன்.'' என்றார்.