எம்.மனோசித்ரா

ரஷ்யாவின் போர்க் கப்பல் ஒன்றுடன் , அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரு நீர்மூழ்கிக் கப்பல்கள் இன்று சனிக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. 

எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட சேவைகள் நிமித்தம் இந்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

இன்று காலை 7 மணியளவில் ஏனைய நீர்மூழ்கி கப்பல்கள் இரண்டும் துறைமுகத்தை வந்தடைந்தன. நாளை மறுதினம் திங்கட்கிழமை இவை திரும்பி செல்லவுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை காலை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று  குறித்த கப்பல்களைப் பார்வையிட்டதாகவும் கடற்படை பேச்சாளர் இந்திக டி சில்வா மேலும் தெரிவித்தார்.