நீண்ட விடுமுறை : சுற்றுலா செல்ல ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தகவல்கள் - உஷார் நிலையில் பொலிஸார்

16 Oct, 2021 | 02:03 PM
image

(எம்.மனோசித்ரா)

நீண்ட விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

எனவே மாகாண எல்லைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள சகல பாதுகாப்படையினருக்கும் போக்குவரத்து தொடர்பில் தீவிர அவதானம் செலுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.  

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறக் கூடிய மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கக் கூடிய 13 எல்லைகளில் வெள்ளியன்று விசேட கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன. 

இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளில் 106 பொலிஸ் உத்தியோகத்தர்களும், 87 இராணுவத்தினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த எல்லைப்பகுதியில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முற்பட்ட 497வாகனங்களும், 914 நபர்களும் , அதே போன்று மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கமுற்பட்ட 790 வாகனங்களும் , 1229 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். 

இதன் போது அனுமதியின்றி மாகாண எல்லையை கடக்க முற்பட்ட 223 நபர்கள் அவர்கள் பயணித்த 129 வாகனங்களுடன் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

தற்போது நீண்ட விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

 எனவே சுற்றுலாத்தளங்கள், கடற்கரை பிரதேசங்கள் உள்ளிட்டவற்றின் வாகன தரிப்பிடங்களை சோதனைக்குட்படுத்துமாறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வாகன தரிப்பிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இலக்க தகடுகள் பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்படும். 

அதற்கமைய நபரொருவரால் அல்லது குழுக்களால் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அல்லது மாகாண போக்குவரத்து கட்டுப்பாடுகள் மீறப்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். 

அதற்கமைய மாகாண எல்லைகளிலுள்ள சகல பாதுகாப்படையினருக்கும் போக்குவரத்து தொடர்பில் தீவிர அவதானம் செலுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்;டுள்ளது.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் நேற்று சனிக்கிழமை காலை 6 மணி வரை 80 929 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வெள்ளியன்று 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் சகல மாகாண எல்லைகளும் உள்ளடங்கும் வகையில் 158 வீதித்தடைகளை நிறுவப்பட்டுள்ளன. 

குறித்த வீதித்தடைகளில் வெள்ளியன்று 6505 வாகனங்களும் , அவற்றில் பயணித்த 15 135 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதன் போது அநாவசிய பயணங்களை முன்னெடுத்திருந்த 749 நபர்கள் , 323 வாகனங்களுடன் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெஹிவளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-15 15:45:25
news-image

45 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2025-03-15 15:34:47
news-image

நீர்கொழும்பில் பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு

2025-03-15 15:22:57
news-image

தேசபந்து தென்னக்கோனின் மனைவி, மகனிடமிருந்து வாக்குமூலம்...

2025-03-15 15:09:45
news-image

பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” உட்பட...

2025-03-15 14:48:51
news-image

சர்வதேச வர்த்தக மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

2025-03-15 14:22:12
news-image

நானுஓயாவில் ரயில் தடம் புரண்டதால் மலையக...

2025-03-15 14:17:53
news-image

வனவிலங்குகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்

2025-03-15 13:31:02
news-image

லுணுகம்வெஹெர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-15 13:16:50
news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56
news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03