கையடக்கத்தொலைபேசியினை மீட்க கழிவறையில் கைவிட்ட இளைஞன்

Published By: Raam

20 Sep, 2016 | 12:02 PM
image

சீனாவின் குவாங்டாங் மாகாணம்  ஹூயூசூ நகரை சேர்ந்த இளைஞன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

மது போதையில் கழிவறைக்கு சென்று கழிவறையில் வைத்து தனது கைய்க்கத்தொலைபேசியில் உரையாடிக் கொண்டு இருந்துள்ளார். 

அப்போது கைதவறி கையக்கத்தொலைபேசி கழிவறையினுள் விழுந்துள்ளது. போதையில் இருந்த அவர் தனது கையடக்கத்தொலைபேசியினை எடுக்க போராடியுள்ளார்.

தனது இடது கையை கழிவறையினுள் விட்டு கையடக்கத்தொலைபேசியினை எடுக்க முயற்சித்துள்ளார். அச்சமயத்தில் அவரின் கை கழிவறையில் மாட்டி கொண்டுள்ளது. தனது கையை வெளியே எடுக்க  இரவு முழுவது அவர் முயற்சி செய்து உள்ளார். ஆனால் முடியவில்லை. இதனால்  உதவி கோரி கத்தியுள்ளார்.

அக்கம்பக்கம் உள்ளவர்கள் கொடுத்த தகவல் படி தீயணைக்கும் படையினர் வந்து  கழிவறையை உடைத்து இளைஞனை மீட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்