(எம்.எப்.எம்.பஸீர்)
கம்பஹா மாவட்டத்தின் ஜா எல, கந்தானை, ஏக்கல உள்ளிட்ட பகுதிகளை அண்மித்து முச்சக்கர வண்டிகளை திருடி, அவற்றை விற்பனை செய்து வந்த கும்பலொன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.
6 சந்தேக நபர்களைக் கொண்ட இந்தக் கும்பல் திருடியதாக கருதப்படும் 20 முச்சக்கர வண்டிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
திட்டமிட்ட வகையில் இந்த நடவடிக்கையை குறித்த குழு முன்னெடுத்துச் சென்ற நிலையிலேயே ஜா - எல பொலிசாரின் சூட்சுமமான விசாரணைகளில், அக்குழுவைக் கைதுசெய்ய முடிந்ததாக ஜா எல பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள்களில் சென்று, முச்சக்கர வண்டி திருட்டில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ள நிலையில் , அதற்காக பயன்படுத்தப்பட்ட 10 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போதைக்கு விசாரணைகளில், குறித்த கும்பலைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்துள்ளதாகவும் அவர்கள், ஜா எல, கற்பிட்டி, ராகம மற்றும் போபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 25 - 38 வயதுகளை உடையவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் திருடிய 20 முச்சக்கர வண்டிகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
அதில் 11 முச்சக்கர வண்டிகள், பிரதான சந்தேக நபருக்கு சொந்தமான ராகம வாகன தரிப்பு நிலையம் ஒன்றிலிருந்தும், 4 முச்சக்கர வண்டிகள் கற்பிட்டி மற்றும் ராகமை பகுதி வாகன திருத்தும் நிலையங்கள் இரண்டிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 5 முச்சக்கர வண்டிகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், ராகம, பமுனுகம, கற்பிட்டி பகுதிகளில் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் கைதுசெய்யப்பட்டோரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM