கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ஓட்டங்களால் தோற்கடித்து 2021 ஐ.பி.எல். கிண்ணத்தை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியது,
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடந்தது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 192 ஓட்டங்களை குவித்தது.
சென்னை அணி சார்பில் கெய்க்வாட் 32 ஓட்டங்களையும் உத்தப்பா 31 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட டூ பிளெசிஸ் 86 ஓட்டங்களை குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
மொயீன் அலி 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடினர். வெங்கடேஷ் அய்யர் 50 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நிதிஷ் ரானா டக் அவுட்டானார். சுனில் நரேன் 2 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஷுப்மான் கில் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 27 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. அத்துடன் நான்காவது முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியது.
சென்னை அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட், ஹேசில்வுட், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM