வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல் - முழு விபரம் இதோ !

15 Oct, 2021 | 09:00 PM
image

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலையடுத்து தற்போது புதிய சுகாதார விதிமுறைகளை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள புதிய சுகாதார வழிகாட்டலானது 2021 ஒக்டோபர் 15 முதல் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

எவ்வாறாயினும், ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார விதிமுறைகளும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அமைச்சு அறிவித்துள்ளது.

நாளாந்தம் இரவு 10 மணி முதல் அதிகாலை 04 மணி வரை விதிக்கப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

தொழில், சுகாதார தேவைகள் மற்றும் பொருட்கொள்வனவிற்காக வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியேற முடியும்.

பயிற்சி பட்டறைகள், மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் இணையத்தளத்தினூடாக மாத்திரமே இடம்பெற முடியும். நேரடியாக இடம்பெறுமாயின் 25 வீதமானவர்கள் மாத்திரமே பங்கேற்க முடியும். ஒரு தடவையில் 50 பேர் மாத்திரமே ஒன்றுகூட முடியும்.

பண்டிகைகள், களியாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்த முடியாது. வீடுகளுக்குள் இடம்பெறக்கூடிய நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும்.

பொருளாதார மத்திய நிலையங்களில் மொத்த விற்பனை மாத்திரமே இடம்பெற முடியும்

உணவு விடுதிகளில் 30 வீதமானவர்கள் மாத்திரமே உள்வாங்கப்பட முடியும். வெளியரங்க இருக்கை வசதி வரவேற்கப்படுகின்றது.

உணவு விடுதிகளுக்குள் மது அருந்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்பொருள் அங்காடிகள், சுப்பர் மார்க்கெட்கள், மருந்தகங்களில் 20 வீதமானவர்கள் மாத்திரமே குறிப்பிட்ட நேரத்திற்குள் கொள்வனவில் ஈடுபட முடியும்.

ஆசனங்களுக்கு ஏற்ப மாத்திரமே பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிகளை ஏற்ற முடியும்.

சிகையலங்கார நிலையங்கள், அழகு நிலையங்களுக்கு முன்னறிவித்தலின் பின்னரே வாடிக்கையாளர்கள் செல்ல முடியும்.

ஆரம்ப பாடசாலைகள் 50 வீதமான மாணவர்களுடன் இயங்க முடியும்.

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் திரையரங்குகளில் ஒரு காட்சிக்காக 25 வீதமான பார்வையாளர்களை உள்வாங்க முடியும்.

திருமணங்களில் அதிகபட்சம் 50 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும்.

வர்த்தக நிலையங்கள், சில்லறை வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், சிறப்பு அங்காடிகள் மற்றும் வீட்டுப் பொருள் விற்பனை நிலையங்கள் என்பனவற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் மொத்த கொள்ளளவில் 20 சதவீதமானோருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட வேண்டும்.

குறித்த இடங்களில் அனுமதிக்ககூடிய நபர்களின் எண்ணிக்கை வெளியே காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

வங்கிகள், நிதி நிறுவனங்கள், அடகு பிடிப்பு நிலையங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் 5 பேரை மாத்திரம் அனுமதிக்க முடியும் என்பதுடன் ஏனையோர் குறித்த இடங்களுக்கு வெளியே சமூக இடைவெளியை பேணியவாறு வரிசையில் நிற்க வேண்டும்.

கட்டுமாண தளங்களின் பணிகளை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்க முடியும்.

விவசாய நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள், கூட்டு வழிபாடு மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவகங்களை சுகாதார வழிகாட்டலுக்கு அமைய ஆரம்பிக்க முடியும்.

பகல் நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களைத் திறக்க அனுமதி.

பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக அனுமதிக்கப்படுவதுடன், பிரதேச குழுக்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் அவை இயங்க வேண்டும்.

திறந்த சந்தைகள் மற்றும் வாராந்த சந்தைகள் என்பனவும் பிரதேச குழுக்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் இயங்க வேண்டும்.

நடமாடும் வர்த்தகங்கள் பிரதேச குழுக்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் இயங்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41