குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெறும் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்திய ரிட் மனு - சட்ட மா அதிபருக்கு நீதிமன்றம் அறிவித்தல்

Published By: Digital Desk 4

15 Oct, 2021 | 09:54 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

 

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில், கொழும்பு,  ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றில் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரத்தை வாபஸ் பெற சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை பரிசீலனைக்கு எடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அரசியலமைப்பின் 140 ஆவது அத்தியாயத்துக்கு அமைய  தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த எழுத்தாணை நீதிப் பேராணை மனு  இன்று மேன் முறையீட்டு நீதிமன்றின் சோபித்த ராஜகருனா மற்றும் தம்மிக கனேபொல அகைய நீதிபதிகள் முன்னிலையில் ஆராயப்பட்டது. இதன்போதே இந்த உத்தர்வு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ரிட் மனுவானது எதிர்வரும் 29 ஆம் திகதி பரிசீலிக்கப்படும் என அறிவித்த மேன் முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதிகளான சட்ட மா அதிபர் மற்றும் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டது.

 கொழும்பில் வைத்து கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்களின் பெற்றோர்களான, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சரோஜா கோவிந்தசாமி நாகநாதன்,  மருதானையைச் சேர்ந்த ஜமால்தீன்  ஜெனி பஸ்லீன் ஜெனீபர் வீரசிங்க, டொன் மேர்வின் பிரேமலால் வீரசிங்க, தெமட்டகொடவைச் சேர்ந்த  அமீனதுல் ஜிப்ரியா சப்ரீன் ஆகியோரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

சி.ஏ. ரிட் 424/21 எனும் இலக்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ரிட் மனுவில், பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர் மற்றும் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பி, 2 ஆம் பிரதிவாதிக்கு எதிரான மேல் நீதிமன்ற குற்ற பகிர்வுப் பத்திரிகையுடன் தொடர்புடைய ஆவணங்களை மேன் முறையீட்டு ப்னீதிமன்ற பொறுப்பில் எடுத்து ஆராய தடைமாற்று நீதிப் பேராணை  (Writ of Certiorari) ஊடாக இடைக்கால உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. 

அத்துடன் மனுவை விசாரணை செய்து 2 ஆம் பிரதிவாதியான வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரிகையை முன்னோக்கி கொண்டு செல்ல  முதல் பிரதிவாதி சட்ட மா அதிபருக்கு கட்டளைப் பேராணை (Writ of Mandamus)ஒன்றினை பிறப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

 இன்று மனுதாரர்கள் சார்பில், சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன மன்றில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள்...

2024-04-12 21:41:41
news-image

ஞானசாரருக்கு நாளை விடுதலை இல்லை!

2024-04-12 21:00:04
news-image

புதுக்குடியிருப்பில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் பலி...

2024-04-12 18:49:17
news-image

அண்ணனின் தாக்குதலில் தம்பி உயிரிழப்பு :...

2024-04-12 18:36:53
news-image

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2024-04-12 18:22:35
news-image

இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் 200 கிலோ...

2024-04-12 17:53:23
news-image

கொவிட் தொற்றினால் குருணாகல் வைத்தியசாலையில் ஒருவர்...

2024-04-12 17:36:50
news-image

இலங்கையுடனான பாதுகாப்பு இராஜதந்திரத்தை தீவிரப்படுத்தும் இந்தியா...

2024-04-12 09:10:18
news-image

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய...

2024-04-12 16:57:02
news-image

யாழில் இடம்பெற்ற விபத்தில் தொழில் வழிகாட்டல்...

2024-04-12 16:50:32
news-image

ஜூலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு -...

2024-04-12 08:58:25
news-image

'சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களுக்கு புத்தாண்டு'  -...

2024-04-12 08:51:18