(எம்.எம்.சில்வெஸ்டர்)

19  வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டி தற்போது தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

19 வயதுக்குட்ட இலங்கை அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரி மாணவனான துனித் வெல்லாலகே நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இதன்படி முதலில்  துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை, 15 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளுக்கு 45 ஓட்டங்களை பெற்றிருந்தது.

19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு மெஹெரூப் ஹசன் தலைவராக செயற்படுகிறார்.

19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி விபரம்

ஷெவொன் ‍ டேனியல், பவன் பத்திராஜ, சதீஷ ராஜபக்ச, ரயன் பெர்னாண்டோ, ஹரிந்து ஜயசேகர, சதீஷ் ஜயவர்தன, லஹிரு தெவட்டகே, வனுஜ சஹன் குமார, மல்ஷி தருபத்தி,  ஜீவக்க ரஷ்மித்த, ட்ரெவின் மெத்தியு, சசங்க நிர்மல், தனல் ஹேமானந்த, யசிரு ரொட்றிகோ,மதீஷ பத்திரண, சமிந்து விக்கிரசிங்க, லஹிரு அபேசிங்க,  வினிஜ ரண்புல்.