முன்னாள் இந்திய பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான மன்மோகன்சிங் உடல்நலக்குறைவின் காரணமாக புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

முன்னாள் இந்திய பிரதமர் பிரதமரான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அண்மையில் அவருக்கு இதயப் பகுதியில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் காய்ச்சல் காரணமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தற்போது சிகிச்சை அளிக்கப்பட்ட பின் உடல்நலம் சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவர் உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பல கட்சியை சார்ந்த அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது பிரார்த்தனையை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'மன்மோகன் சிங் உடல்நலம் சீராகி விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை' செய்வதாக பதிவிட்டிருக்கிறார்.