பெய்ரூட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ; ஆறு பேர் பலி, 32 பேர் காயம்

Published By: Vishnu

15 Oct, 2021 | 09:20 AM
image

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர்.

ஷியா முஸ்லிம் குழுக்களான ஹிஸ்புல்லா மற்றும் அதன் ஆதரவாளர்கள் ஆகியோர் கடந்த ஆண்டு நகரத்தின் துறைமுகத்தில் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பை விசாரித்த நீதிபதிக்கு எதிராக வியாழக்கிழமை திரண்டதால் இந்த துப்பாக்கி சூடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லெபனான் படைகள் ( Lebanese Forces) பிரிவைச் சேர்ந்த வீரர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

219 பேரைக் கொன்ற பெய்ரூட் துறைமுக வெடிப்பு தொடர்பான விசாரணையை பெரும் பதற்றம் சூழ்ந்துள்ளது.

நீதிபதி பக்கச்சார்பானவர் என்று ஹிஸ்புல்லா மற்றும் அதன் கூட்டாளிகள் கூறுகின்றனர், ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அவரது செயல்பாட்டை ஆதரிக்கின்றன.

வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் நஜிப் மிகடி, வெள்ளிக்கிழமையை ஒரு துக்க நாளாக அறிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47