(எம்.ஆர்.எம்.வசீம்)

 

கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை நிகழ் நிலை வாயிலாக நடத்திச் செல்வதற்கு   மாவட்ட நீதிபதி நீதிமன்ற அலுவலகர் மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை   நீதி அமைச்சர்  அலி சப்ரி  பாராட்டியதோடு அந் நடவடிக்கைகளுக்குத் தேவையான நவீன தகவல் தொடர்பு தொழிநுட்பச் சாதனங்களை நீதி அமைச்சில் வைத்து இன்று வியாழக்கிழமை   கல்கிசை மாவட்ட நீதிமன்றத்துக்கு கையளித்தார்.

நாடளாவிய ரீதியில் பரந்திருக்கும் நீதிமன்றங்களில் நிலவும் குறைபாடுகளை அவதானித்து தரவுத் தொகுதியொன்றைத் தாபிப்பதன் பின்னர் அக் குறைபாடுகளை மிகவும் துரிதமாகப் பூர்த்தி செய்வதற்கு நீதி அமைச்சினால் செயற்படுத்தப்படும் விசேட நிகழ்ச்சித் திட்டத்தின் பெறுபேறாகவே இச் சாதனங்கள் வழங்கப்பட்டதாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.