(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு - கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரிஸ்டல் வீதியில் அமைந்துள்ள 5 மாடி கட்டிடம் ஒன்றிலிருந்து ஒரு தொகை தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.  

வீட்டுத்தோட்டத்தில் துப்பாக்கி ரவைகள் மீட்பு! | Virakesari.lk

ரி -56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் 176 தோட்டாக்களும் கைத்துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் 9 எம்.எம். தோட்டாக்கள் 29 உம் இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில்  விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

ஐந்து மாடிகளைக் கொண்ட குறித்த கட்டிடத்தின் மேல் மாடியில் உள்ள மலசல கூடத்துக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள திட்டொன்றுக்கு அருகே இந்த தோட்டாக்கள் இருப்பதை கவனித்துள்ள, துப்புரவு தொழிலாளி ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய  அவை மீட்கப்பட்டதாக பொலிசார் கூறினர். 

மொத்தமாக 205 தோட்டாக்கள் அங்கு காணப்பட்டுள்ள நிலையில்,  குறித்த தோட்டாக்களை அங்கு எடுத்து வந்தவர் யார், எதற்காக எடுத்து வந்தார். அதன் பின்னணி என்ன, ஏதும் குற்றச் செயல்களை முன்னெடுக்க தயார்படுத்தல்கள் இருந்தனவா என்பன உள்ளிட்ட பலகோணங்களில் விசாரணைகளை சி.சி.டி.யினர் ஆரம்பித்துள்ளனர்.