(எம்.ஆர்.எம்.வசீம்)
யுத்தத்தில் கொல்லப்பட்ட சிங்களம், தமிழ், முஸ்லிம் அனைவருக்குமான நினைவேந்தல் நிகழ்வை பொதுவான ஒரு இடத்தில் மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று இனங்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பேச்சுக்களை முற்றாக தடைசெய்வதுடன் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நீதி நிலை நாட்டப்படவேண்டும்.
இல்லாவிட்டால் மீண்டுமொரு இனப்பிரச்சினைக்கான வழி ஏற்படும் என தேசிய சமாதான பேரவை ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
முன்னைய ஆனைக்குழுக்கள் மற்றும் விசாரணைக்குழுக்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிர்கால நடவடிக்கை எடுத்தல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமா்வு நேற்று பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆணைக்குழுவின் தலைவரும் உயா் நீதிமன்ற நீதியரசருமான துலிப் நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு இன நல்லிணகத்துக்கு தங்களது பரிந்துரைகளை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.
ஓய்வு பெற்ற மெதடிஸ் திருச்சபை ஆயர் ஆசிரி பெரேரா குறிப்பிடுகையில்,
இன நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய விடயங்களை இனம் கண்டு அதற்கு தீர்வு காணப்படவேண்டும். குறிப்பாக யுத்தத்தில் மரணித்தவர்களுக்கான நினைவஞ்சலி நிழ்வின்போது இனங்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
அதனால் யுத்தத்தில் மரணித்த அனைவரும் சிங்களம்,தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர் என யாராக இருந்தாலும் அவர்கள் எமது பெற்றோர்கள், சகோதரர்கள் அல்லது உறவினர்கள். இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை வழங்கியே செயற்படவேண்டும்.
அத்துடன் யுத்தத்தில் மரணித்த அனைவருக்கும் பொதுவான ஒரு இடத்தில் ஒன்றாக நினைவஞ்சலி நிழ்வு நடத்தக்கூடாது? மரணித்தவர்கள் ராணுவத்தினராக, பயங்கரவாதிகளாக இருக்கலாம்.
அது நாங்கள் வழங்கிய முத்திரையாகும். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் மேற்கொண்ட செயற்பாடுகளை அவர்களுடன் கொண்டு சென்றனர்.
ஆனால் எஞ்சியிருக்கும் அவர்களின் உறவினர்கள் மற்றும் சமூகத்தில் இருப்பவர்கள் அவர்களை நினைவுகூரவேண்டும். ஏனெனில் எமக்கு இழந்தது தாய், தந்தை, பிள்ளை. அவர்களை நினைவுகூருவது தவறா? இதனை நாங்கள் உணர்ந்து செயற்படவேண்டும்.
அதேபோன்று இனங்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பேச்சுக்களை முழுமையாக நிறுத்தவேண்டும். இவ்வாறான பேச்சுக்கள் சமூக வலைத்தளம் ஊடாகவே மேற்கொள்வதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
அதில் மாத்திரம் அல்ல. நாட்டில் இருக்கும் பிரதான ஊடகங்களில் ஊடாகவும் வெறுப்புணர்வு பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக ஞானசார தேரர் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்து வருகின்றார். அவ்வாறான செயற்பாட்டாளர்களுக்கு ஊடகங்கள் இடமளிக்கக் கூடாது.
கொவிட் 19 மரணமாகும் முஸ்லிம்,கிரிஸ்த்தவா்களது சடலங்களை அடக்குவதற்காக பல போராட்டங்களுக்குப் பிறகு ஒரே ஒரு இடம் அடக்கம் செய்வதற்கு வழங்கப்பட்டது.
ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம்களது சடலங்களை எரிப்பதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் 13 வழக்குகள் தாக்கல் செய்தும் அதனை உயா் நீதிமன்றம் விசாரிப்பதற்கே ஏற்றுக் கொள்ளாமல் தள்ளுபடி செய்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடமாவது முஸ்லிம்களுக்கு வழங்கப்படல் வேண்டும் என்றார்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தா் பேராசிரியர் ரீ.ஜெயசிங்கம் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் அல்லது அதில் திருதங்களை மேற்கொள்ளவேண்டும்.
ஏனெனில் இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அதிகமானவர்களுக்கு எதிராக இன்னும் வழக்கு தாக்கல் செய்யப்படாமல் இருக்கின்றது.அதேபோன்று வடக்கு கிழக்கில் தனியாருக்கு சொ்ந்தமான காணிகள் இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழே இருக்கின்றன. அதனை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியவேண்டும். ஏனெனில் வந்தாருமூலை பல்கலைக்கழகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில், நான் கண் கண்ட சாட்சி. அதனால் ஒருவர் இருக்கின்றாரா இல்லையா என தேடுவது ஒரு கடினமான விடயம். அதனால் இதுதொடர்பில் உண்மை அறியும் ஒரு செயற்திட்டம் அமைக்கப்படவேண்டும்.
அத்துடன் மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிறைவேற்று அதிகாரம் இல்லாமலாக்கப்பட்டு, தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். அதற்காக விரைவாக மாகாண சபை தேர்தல் விரைவாக நடத்தப்படவேண்டும் என்றார்.
இலங்கை முஸ்லிம் கவுன்சில் உப தலைவர் ஹில்மி அகமட் குறிப்பிடுகையில், ஞானசார தேரர் பகிரங்கமாகவே அரச மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் தோன்றி, ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி முஸ்லிம்களது இறைவன் அல்லாஹ் என வெறுப்புப் பேச்சுக்களை பேசுகின்றார். இவரின் நடவடிக்கைக்கு எதிராக பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால் முகநுாலில் எழுதிய இளம் எழுத்தாளா்கள், குர்ஆனை வைத்திருந்தவா்கள், தனது கையடக்க தொலைபேசியில் குர்ஆன், ஹதீஸ் வசனங்களை வைத்திருந்தவா்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வருடக்கணக்கில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனா். 90 நாட்களுக்கு மேலாக அவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தாமலும் பிணை வழங்காமலும் வைக்கப்பட்டுள்ளனா்.
இவ்வாறு நீதி நிலைநாட்டப்படாமல் இருப்பதாலும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மேலும் விரக்தியடைவார்கள். அதனால் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் அல்லது அதில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM