(ஆர்.யசி)
மாகாணசபை தேர்தலை நடத்துவதாகவும் பொலிஸ், காணி அதிகாரங்கள் பற்றியெல்லாம் வெளியில் பேசிக்கொண்டு இருக்கின்ற சகல அதிகாரங்களையும் மாகாணங்களிடம் இருந்து பறிக்கும் சூழ்ச்சியை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் விதமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டுள்ளதாகவும் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினானுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் எனத் இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் இன்றைய தினம் தெரிவித்தார்.
இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினானை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (14) சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து இதன்போது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

தமிழர்கள் தமது உணர்வுபூர்வமான நினைவுகளை மேற்கொள்வதற்கு முடியாத வகையில் அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி தடைகள் விதிப்பதாகவும், அதனை மீறி நினைவேந்தல்கள் இடம்பெற்றால் புலனாய்வாளர்கள் மூலமாக நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களை அச்சுறுத்தப்படுவதுடன் கைதுகளும் இடம்பெறுவதாகவும் சிறீதரன் எம்.பி கூறியுள்ளதுடன், தமிழர்களின் உணர்வு பூர்வமான நிகழ்வுகளை ஏதேனும் காரணம் காட்டி அரசாங்கம் நிறுத்துகின்ற போதிலும் அரசாங்கம் பாரிய விழாக்களை எந்தவித தடைகளும் இன்றி நடாத்துவது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலாலும் தமிழ் இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் உள்ள பின்னடைவாலும் இலங்கையில் வட பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவு கூறியுள்ள சிறீதரன் எம்.பி, தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்பாகவும் தமிழர்களின் பூர்விக அடையாளங்களை அழித்து பௌத்த சிங்கள அடையாளங்களை திணிப்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை மாகாண சபைகளினுடைய அதிகாரத்திற்குள் இருக்கின்ற பாடசாலைகள், வைத்தியசாலைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றது.
அத்துடன் வெளியில் காணி அதிகாரம் போலீஸ் அதிகாரம் மட்டும் பேசிக்கொண்டு இருக்கும் போது இருக்கின்ற அதிகாரத்தினையும் இலங்கை அரசு மாகாணங்களிடம் இருந்து பறித்துக்கொண்டு இருக்கிறார்கள் எனவும், இதுவரை மாகாண அரசின் அதிகாரத்திற்குட்பட்ட வடக்கு மாகணங்களில் உள்ள மாவட்ட வைத்தியசாலைகளின் கட்டுப்பாடுகளை இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதுடன் மாகாண பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக ஆக்குவதன் ஊடாகவும் தமிழர்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது எனவும் கனேடியத் தூதுவருக்கு எடுத்துக்கூறியுள்ளார்.
கனேடிய தேசிய விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கும் ஜெனிவா தீர்மானங்களில் கனடிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் ஒத்துழைப்புகளுக்கும் கனேடிய அரசிற்கும் நன்றி தெரிவித்ததுடன்,கனடிய அரசாங்கம் மனிதாபிமானத்துடனும் பக்கர்ச்சார்பு இன்றியும் தொடர்ந்தும் ஜெனிவா தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு தருவோம் எனவும் கனடிய தூதுவர் தமக்கு வாக்குறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM