(இராஜதுரை ஹஷான்)

மத்திய கலாச்சார நிதியத்தின் கீழ் உள்ள அனைத்து நூதனசாலைகள் மற்றும் தொல்பொருள் நிலையங்கள் சுற்றுலா சேவைக்காக இன்று திறக்கப்பட்டுள்ளன.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய சுற்றுலா பயணிகளுக்காக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.என மத்திய கலாச்சார நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜனரால் பேராசிரியர் காமினி ரணசிங்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அனைத்து நூதனசாலைகளும் திறக்கப்படும் - மத்திய கலாச்சார நிதியம் | Virakesari .lk

பிரதான சுற்றுலா மையங்களான பொலன்னறுவை, சீகிரிய, கதிர்காமம், காலி, கண்டி, மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நூதனசாலைகளும், மத்திய கலாச்சார நிதியத்தின் கீழ் உள்ள அனைத்து நூதனசாலைகளும், தொல்பொருள் மத்திய நிலையங்களும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மீள திறக்கப்பட்டுள்ளன.இதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் காலி கோட்டையில் நிர்மானிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகமும், இலங்கையில் முதலாவதாக திறந்த வெளியில் நிர்மானிக்கப்பட்ட இப்பன்கடுவ மஹா சீலா மயான பூமியில் உள்ள நூதனசாலை, இரத்தினபுரி, மொனராகல, நாமல் உயன, திருகோணமலை, தம்பதெனிய, ரிதி விகாரை, யாழ்ப்பாணம்,ர மீபா விகாரை ஆகிய இடங்களில் உள்ள அனைத்து நூதனசாலைகளும் திறக்கப்படும்.