(இராஜதுரை ஹஷான்)
தேசிய மட்டத்தில் சமையல் எரிவாயுவின் விலையை குறுகிய காலத்திற்குள் மீண்டும் அதிகரிக்க நேரிடும். அவ்வாறு விலை அதிகரிக்கப்படாவிட்டால் உலக சந்தையில் நிலையியல் தன்மையை பேணுவதில் சிக்கல் நிலை ஏற்படும் என லிட்ரோ பாதுகாக்கும் சங்கத்தின் செயலாளர் ஜே.யு.எஸ்.டெரன்ஸ் அப்புஹாமி தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் காலங்களில் குறைவடையும் என மக்களுக்கு பொய்யான வாக்குறுதியை வழங்க தயாரில்லை. சமையல் எரிவாயுவின் விற்பனை விலையை நிலையாக பேணுவதற்கு உரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு மத்தியில் மக்கள் எதிர்க்கொண்டுள்ள அசௌகரியங்களை உணர முடிகிறது.
குறுகிய காலத்திற்குள் உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது.குளிர்காலம் ஆரம்பமானதை தொடர்ந்து உலக சந்தையின் தற்போதைய விலை இரு மடங்காக அதிகரிக்கப்படும்.
தற்போதைய விலையேற்றத்தின் ஊடாக இதுவரை காலமும் எதிர்க் கொண்ட நட்டத்திலிருந்து மீள முடிந்துள்ளதே தவிர எவ்வித இலாபமும் கிடைக்கப் பெறவில்லை.எரிவாயு தொடர்பில் முறையான விலை சூத்திரம் பேணப்படாத காரணத்தினால் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது.
லிட்ரோ நிறுவனம் 2019ஆம் ஆண்டு முதல் காலாண்டிற்கு பிறகு இலாபமடையவில்லை.கடந்த செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 11 ஆயிரம் மில்லியன் நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளோம்.
தற்போது அதிகரிக்கப்பட்ட விலையினால் எவ்வித இலாபமும் கிடைக்கப்பெறவில்லை. ஒரு சிலின்டர் இறக்குமதிக்கு மாத்திரம் 2,675 ரூபாய் செலவாகிறது.
எதிர்வரும் இரு மாத காலப்பகுதியில் உலக சந்தையில் எரிவாயுவின் விலை 50 தொடக்கம் 100 டொலர்களினால் அதிகரிக்கப்படும். இவ்வாறான நிலையில் மீண்டும் எரிவாயுவின் விலையை அதிகரிக்க நேரிடும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM