பதுளை கன்தகெட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (19) கன்தகெட்டிய வைத்தியசாலையின் முன் இடம்பெற்றுள்ளது.

ஜீப் ரக வாகனமொன்று சாரதியின்  கட்டுபாட்டை இழந்து பாதையோரத்தில் அமர்ந்திருந்த வாயோதிப பெண்ணொருவர் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த வயோதிபப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 62 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.