தெற்கு தாய்வானிலுள்ள காஹ்சியுங் துறைமுக நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

குறித்த குடியிருப்புத் தொகுதியானது 13 மாடிகளை கொண்டது.

அதிகாலை 3  மணியளவில் இடம்பெற்ற தீபத்தில் 13 மாடி கட்டிடத்தில் பல குடியிருப்புகள் எரிந்து நாசமாகியுள்ளன.

தீ விபத்து குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

55 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 14 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து குறைந்தது 11 சடலங்கள் பிணவறைக்கு நேராக கொண்டு செல்லப்பட்டதாக  தீயணைப்பு துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

அதிகாலை 3 மணியளவில் வெடிச்சத்தம் கேட்டதாக தீ விபத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.