இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனா  உடை அணிந்து இளம் பெண்கள் நடனமாடியுள்ளனர்.

உலகில் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனதில் வைத்து பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நவராத்தியை ஒட்டி நடத்தப்படும் கலை, நடன நிகழ்ச்சியான கர்பா விழாவில் கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளம்பெண்கள் கொரோனா  உடை அணிந்து  நடனமாடியுள்ளனர்.

இதுகுறித்து கர்பா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலேயே இந்த நடனத்தை ஒழுங்கு செய்ததாக தெரிவித்துள்ளனர்.