(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

அதிகரிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை இவ்வருடத்திற்குள் குறைவடையும்.

மாகாண சபை தேர்தலை இலக்காகக் கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை என  வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வியாபாரிகளின் செயற்பாடுகளினால் அரசாங்கத்தின் கொள்கையை மாற்றிக்கொள்ள  நேர்ந்துள்ளது - பந்துல குணவர்தன | Virakesari.lk

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினை தொடர்ந்து உற்பத்தி மற்றும் சேவைத்துறையின் கட்டணம் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக உலக சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. உலக சந்தையின் விலையேற்றத்தை அரசாங்கத்தினால் முகாமைத்துவம் செய்ய முடியாது.

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளது.

இவ்வாறான நிலையில் தேசிய மட்டத்தில் விலையேற்றத்தை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.சமையல் எரிவாயுவின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கும் நிலை ஏற்படலாம்.

இவ்வருடத்திற்குள் திறைச்சேரி ஊடாக நிதி ஒதுக்கி அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க எதிர்பார்த்துள்ளோம்.

மாகாண சபை தேர்தலை இலக்காகக் கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை. விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

குறுகிய அரசியல் நோக்கததை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பூகோளிய பொருளாதாரம் தற்போது எதிர்க் கொண்டுள்ள நிலைமையை அறிவார்ந்த மக்கள் புரிந்துக்கொள்வார்கள்.

எதிர்க்கட்சியினர் குறுகிய அரசியல் நோக்கத்தை கைவிட்டு மக்கள் மத்தியில் உண்மை காரணிகளை எடுத்துரைக்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அரசாங்கத்திற்கு எதிராக அமையும்.என்பதை நன்கு அறிவோம். அரசாங்கத்தின் விருப்பத்திற்கமைய பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை என்றார்.