ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணத்துக்கான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 162 ஓட்டங்களை குவித்துள்ளது.

May be an image of one or more people, people playing sports and text

இரு அணிகளுக்கும் இடையிலான பயிற்சிப் போட்டி இன்று காலை அபுதாபி டொலரன்ஸ் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கை அணி சார்பில் அதிகபடியாக பதும் நிஷாங்க 73 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 61 ஓட்டங்களையும் பெற்று, ஆட்டமிழக்காதிருந்தனர்.

163 என்ற வெற்றியிலக்கை நோக்கி பப்புவா நியூ கினியா அணி சற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பிக்கும்.