கடந்த ஆறு வாரங்களில் கொவிட் -19 நோய்த்தொற்றின் மிகப்பெரிய அதிகரிப்பை நியூஸிலாந்து வியாழனன்று அறிவித்துள்ளது.

A vaccination centre sign directs the public during a lockdown to curb the spread of a coronavirus disease (COVID-19) outbreak in Auckland, New Zealand, August 26, 2021.  REUTERS/Fiona Goodall

அனைத்து கொரானா தொற்றாளர்களும் ஆக்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதனால் அடுத்த வாரத்திற்கு அப்பாலும் நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்துக்கான முடக்கல் கட்டுப்பாடுகள் மேலும் நீடிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

நியூஸிலாந்தில் மொத்தம் 71 புதிய தொற்றாளர்கள் வியாழன்று அடையாளம் காணப்பட்டனர். இவை அனைத்தும் ஆக்லாந்தில் பதிவானவை ஆகும்.

டெல்டா பரவலுக்கு மத்தியிலும் நியூசிலாந்தில் 4,472 உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 28 உயிரிழப்புகள் மாத்திரமே அங்கு இடம்பெற்றுள்ளது.

வெகுஜன தடுப்பூசி திட்டத்தன் கீழ் அங்கு சுமார் 2.49 மில்லியன் மக்கள் முழுமையாக தடுப்பூசிளை பெற்றுள்ளனர்.