பொலிஸ் அதிகாரி ஒருவர் ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலயத்திற்குள்ளும் ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்குள்ளும்  காலணியுடன்  பிரவேசித்ததாகச் செய்திகள் சமூக வலைத்தளங்களிலும் இணையத் தளங்களிலும் பரவி வருகின்றது.

இந்த விடயத்தினைக் கருத்திற்கொண்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் அது தொடர்பான முழுமையான விபரங்களைப் பெற்று நடவடிக்கை எடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்தவுடன் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்கள்.