பரபரப்பான போட்டியில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா

By Vishnu

14 Oct, 2021 | 07:45 AM
image

வெங்கடேஷ் அய்யர் - சுப்மான் கில்லின் வலுவான ஆரம்பத்துடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடரல் 2 ஆவது தகுதிச்சுற்று ஆட்டம் நேற்றிரிவு சார்ஜாவில் ரிஷாப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஆரம்ப வீரர்களான பிரித்வி ஷா 18, தவான் 36 ஆகியோர் ஓரளவிற்கு ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஸ்டாய்னிஸ் 23 பந்தில் 18 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார். ரிஷாப் பந்த் 6 ஓட்டத்துடனும், ஹெட்மேயர் 17 ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர்.

ஷ்ரேயாஸ் அய்யர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 27 பந்தில் 30 ஓட்டங்களை பெற டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்களை எடுத்தது. 

136 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. 

தொடக்க வீரர்களான சுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவரில் 96 ஓட்டங்களை குவித்தது. 

அரைசதம் அடித்த வெங்கடேஷ் அய்யர் 41 பந்தில் 55 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். 

அடுத்து சுப்மான் கில் உடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். அணியின் ஓட்ட எண்ணிக்கை 16 ஓவரில் 123 ஓட்டங்களாக இருக்கும்போது நிதிஷ் ராணா 12 பந்தில் 13 ஓட்டம் எடுத்து வெளியேறினார். 

அப்போது கொல்கத்தா அணிக்கு 4 ஓவரில் 13 ஓட்டங்களே தேவைப்பட்டது. இந் நிலையில் சுப்மான் கில் 46 பந்தில 46 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடைசி இரண்டு ஓவரில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

19 ஆவது ஓவருக்காக அன்ரிச் நோர்ஜோ பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார். இந்த ஓவரில் 3 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் நோர்ஜே. 

இதனால் கடைசில் ஓவரில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அஷ்வின் கடைசி ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார். 

முதல் பந்தில் திரிபாதி ஒரு ஓட்டம் பெற்றார். 2 ஆவது பந்தில் ஓட்டம் எடுக்கவில்லை. 3 ஆவது பந்தில் ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழந்தார். 4 ஆவது பந்தில் சுனில் நரேன் ஆட்டமிழந்தார். 

இதனால் கடைசி 2 பந்தில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 5 ஆவது பந்தில் திரிபாதி சிக்ஸர் விளாசினார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்களை எடுத்து டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

போட்டியின் ஆட்ட நாயகனாக வெங்கடேஷ் அய்யர் தெரிவானார்.

இறுதிப் போட்டியானது நாளைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ்  - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் டுபாயில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photo Credti ; IPL

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனைவி­யரை உலகக் கிண்ண போட்டிக்கு அழைத்துச்செல்ல...

2022-10-07 10:13:59
news-image

பரபரப்பான போட்டியில் இந்தியாவை 9 ஓட்டங்களால்...

2022-10-07 09:52:33
news-image

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பாக நேபாள...

2022-10-06 19:06:10
news-image

17 வயது ரசிகை பாலியல் வன்கொடுமை...

2022-10-06 14:50:18
news-image

இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்திற்கு...

2022-10-06 11:48:30
news-image

8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப்...

2022-10-06 11:16:02
news-image

இனி ஒருபோதும் கிரிக்கெட் விளையாட முடியாது-...

2022-10-05 17:23:59
news-image

ருசோவ் அபார சதம் : தென்னாபிரிக்காவுக்கு...

2022-10-05 09:19:09
news-image

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர்...

2022-10-04 21:17:20
news-image

இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல, குமார் தர்மசேன...

2022-10-04 16:01:06
news-image

மகளிர் இருபது 20 ஆசியக் கிண்ண...

2022-10-03 11:55:48
news-image

துடுப்பாட்டத்தில் மாலன், பந்துவீச்சில் வோக்ஸ் அசத்தல்...

2022-10-03 09:45:51