வில் மற்றும் அம்புகளைப் பயன்படுததி நோர்வேயில் ஒருவர் முன்னெடுத்த தாக்குதலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

Several killed in Norway bow and arrow attack – POLITICO

தலைநகர் ஒஸ்லோவின் தென்மேற்கில் உள்ள காங்ஸ்பெர்க் நகரில் அந் நாட்டு நேரப்படி மாலை 06:13 மணியளவில் (16:13 GMT) தாக்குதல் நடத்தப்படுவதாக நோர்வே காவல்துறை முதலில் அறிவித்தது.

இந்த தாக்குதலை மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் தனியொருவனாக தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். 

இந் நிலையில் தாக்குதல் பயங்கரவாத செயலா என்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் திகிலூட்டுவதாக அமைந்துள்ளதாக நோர்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் தெரிவித்துள்ளார்.

காங்ஸ்பெர்க் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Multiple people killed in suspected bow and arrow attack in Norway - Sky  News US

Norway bow and arrow attacks LIVE – Five dead and several injured as man  goes on 'gruesome' rampage in Kongsberg - News Colony