(எம்.எம்.சில்வெஸ்டர்)
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 27 ஆம் திகதி அன்று நடைபெறவுள்ள உள்நாட்டின் முன்னணி கழகங்களுக்கிடையிலான 50 ஒவர்கள் கொண்ட போட்டித் தொடரின் களுத்துறை நகர சபை கழகத்துக்கான அணியில் ரோஹித்த ராஜபக்ச இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக மக்கொனையில் அமைந்துள்ள 'சர்ரே வில்லேஜ் ' மைதானத்தில் ரோஹித்த ராஜபக்ச பயிற்சிகளில்ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
களுத்துறை நகர விளையாட்டு கழக அணியை தெரிவு செய்வதற்காக பயிற்சி போட்டிய இன்றைய தினம் நடைபெற்றுள்ளதுடன், இந்த பயிற்சிப் போட்டியில் ரோஹித்த ராஜபக்சவும் பங்கேற்றிருந்தாக தெரிய வருகிறது.
கல்கிஸ்ஸை பரி.தோமா கல்லூரியின் பழைய மாணவரான ரோஹித்த, கல்லூரியின் ரக்பி அணியிலும் சீ.எச். அண்ட் எப்.சீ. கழகத்துக்காக விளையாடியுள்ளார்.
"ரோஹித்த ராஜபக்ச எமது அணியுடன் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். எனினும், அவர் இதுவரையிலும் அவரது பெயரை எமது கழகத்தில் பதிவு செய்யவில்லை. எவ்வாறாயினும், அவர் எமது கழகத்தில் பதிவாகி, இப்போட்டித் தொடரில் எமது கழகத்துக்காக விளையாடுவதை எதிர்பார்ப்பதாக" களுத்துறை நகர சபை கழகத்தின் தலைவர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 27 ஆம் திகதி அன்று ஆரம்பமாகவுள்ள 50 ஓவர்கள் கொண்ட உள்ளூர் அணிகளுக்கு இடையிலான இப்போட்டித் தொடரில் களுத்துறை நகர சபை கழகம் இலங்கை கடற்படை கழகத்தை எதிர்த்தாடவுள்ளது.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரும் கல்கிஸ்ஸை பரி.தோமா கல்லூரியின் பழைய மாணவருமான ஜீவன் மெண்டிஸ், தான் விளையாடும் கழகமான பதுரலெிய விளையாட்டுக் கழகத்தில் ரோஹித்த ராஜபக்சவை இணைத்துக்கொள்ளவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM