மஸ்கெலியா பிவுன்ஸ்விக் தோட்டத்தைச்  சேர்ந்த ரவிகாந்த் என்பவர் நடத்தி வந்த சோழ வியாபார வண்டியை பிரவுன்ஸ்விக் தோட்ட உதவி முகாமையாளர்கள் இருவரும், தோட்ட காவலாளியும் சேர்ந்து உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக குறித்த நபர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

No description available.

தனது மாற்றுத்திறனாளி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வரும் ரவிகாந்த் என்பவர், தனது குடும்ப ஜீவனோபாயத்திற்காக தள்ளுவண்டி ஒன்றில் சோழக்கதிர்களை விற்று வந்துள்ளார்.

இந்த வியாபார நடவடிக்கைகளுக்காக மஸ்கெலியா பிரதேச சபையின் அனுமதியைப் பெற்றே குறித்த தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார்.

No description available.

இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 03 மாதகாலமாக தொழில் செய்ய முடியாத நிலையில் ரவிகாந்த் குறித்த தள்ளு வண்டியை தனது வீட்டிற்கு மேல் உள்ள பிரதான வீதியின் அருகில் நிறுத்திவைத்துள்ளார்.

இதன்போது சம்பவதினமான நேற்று (12.10.2021) மாலை குறித்த வீதியூடாக சென்ற பிவுன்ஸ்விக் தோட்ட உதவி முகாமையாளர்கள் இருவர், ரவிகாந்த்தை அழைந்து இங்கே இந்த வண்டியை நிறுத்திவைக்க கூடாது என்றும், இதனால் தேயிலை செடிகளுக்கும் வீதிக்கும் இடையூறாக இருப்பதாகவும் தெரிவித்து இந்த வண்டியை அகற்றுமாறு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ரவிகாந்த், இன்று என்னால் முடியாது நாளைக் காலை அகற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

No description available.

இதையடுத்து நேற்று மாலை குறித்த  இரு தோட்ட உதவி முகாமையாளர்களும், தோட்ட காவலாளியும், சேர்ந்து அந்த தள்ளுவண்டியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ரவிக்காந்த் குறித்த சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு குறித்த சம்பவத்தால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு நஸ்டயீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.